மடத்துக்குளம் அருகே இலவச மருத்துவ முகாம் - பலர் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் நரசிங்காபுரம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச பொது மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: மடத்துக்குளம் அருகே நடந்த இலவச மருத்துவமுகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.



மடத்துக்குளம் ஒன்றியம், மைவாடி ஊராட்சி, நரசிங்காபுரம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய திமுக, லாவண்யா மருத்துவமனை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஈஸ்வரசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியினை திருப்பூர் தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் இரா.ஜெயராமகிருஷ்ணன் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ஜெயகுமார் துவக்கி வைத்தனர்.



மேலும் இந்நிகழ்வில் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர் சாகுல் அமீது மைவாடி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் நரசிங்கபுரம் கிளைக் செயலாளர் ராஜ்மோகன் உட்பட கிளைக் கழக நிர்வாகிகள் முத்துச்சாமி, சௌந்தரராஜன், முருகானந்தம், கோபால்சாமி எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் நெல்சன் மைவாடி ஊராட்சி செயலர் முகமது இஷாக் உட்பட மருத்துவர்கள் பரமசிவம், கௌரி பரமசிவம், கார்த்திக் உட்பட ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...