கோவையில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 15 வருடம் சிறைத்தண்டனை

கோவையில் கடந்த 2006ஆம் ஆண்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 15 வருட சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கோவை: பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒரு குற்றவாளி உயிரிழந்துவிட்ட நிலையில், மற்றொரு குற்றவாளிக்கு 15 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ரங்கசாமி மகன் முருகேசன் (27) மற்றும் முத்து மகன் சுப்பிரமணி (43) ஆகியோர் கடந்த 2006-ம் ஆண்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முருகேசன் மற்றும் சுப்ரமணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கோவை மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்து பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான முருகேசன் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் மற்றொரு குற்றவாளியான சுப்பிரமணிக்கு 15 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 2000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். வழக்கினை புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் உஷா ஆஜர்படுத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...