மூலனூர் சந்தையில் முருங்கைக்காய் கிலோ ரூ.67-க்கு விற்பனை - வரத்து குறைவே காரணம் என விவசாயிகள் விளக்கம்

மழை பெய்துள்ளதாலும், வரத்து குறைவு காரணமாகவும், மூலனூர் சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.67க்கு விற்பனையானது. கடந்த நான்கு நாட்களாக இதே நிலை நீடிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: மூலனூர் சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து குறைவாக இருந்தாலும் கடந்த நான்கு நாட்களாக ஒரே விலை நீடித்து வருகிறது.

மூலனூர் வாரசந்தை பேரூராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த சந்தையில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் இந்த சந்தைக்கு கொண்டு வருவது வழக்கம். இதை வாங்க மூலனூர் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள கிளாங்குண்டல், போளரை, நத்தபாளையம், கன்னிவாடி ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வாங்கிச்செல்வது வழக்கம்.

இந்த சந்தையில் மூலனூருக்கு பெயர்பெற்ற முருங்கைக்காய் தற்போது மழை பெய்துள்ளதால் வரத்து குறைவால் விலை உயர்ந்து தற்போது ஒரு கிலோ ரூ.67-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மர முருங்கை ரூ.45-க்கும், செடி முருங்கை ரூ.53-க்கும், கரும்பு ரூ.57-க்கும் விற்பனை ஆனது. முருங்கைக்காய் வரத்து குறைவாக உள்ளதால் கடந்த 4 நாட்களாக இதே இதே விலை நீடித்து வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...