கவுண்டச்சிபுதூர் பெஸ்ட்நகரில் கான்கிரீட் சாலை - ரூ.10 லட்சத்தில் அமைக்க பூமி பூஜை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியம் கவுண்டச்சிபுதூரில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட மகளிர் சுகாதார கழிவறையும் திறந்து வைக்கப்பட்டது.


திருப்பூர்: தாராபுரம் ஒன்றியம் கவுண்டச்சிபுதூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்தில் சிமெண்டு கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது.

தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் 3-வது பெஸ்ட் நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்தில் சிமெண்டு கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.செல்விரமேஷ் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஈ.சசிக்குமார், 3-வது வார்டு உறுப்பினர் நர்மதா ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் ரூ.10 லடசத்தில் சிமெண்டு கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து அதே பகுதியில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட மகளிர் சுகாதார கழிவறையை திறந்து வைத்து ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் கூறுகையில் “இப்பகுதியில் அதிகமாக மக்கள் வசிக்கும் பகுதியில் பெண்கள் காலை கடனை முடிக்க பெரும் உதவியாக இருக்கும். இதனை மக்கள் தினசரி பயன்படுத்திய பின்பு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்ள வேண்டியது உங்கள் கடமையாகும்” என்றார். அப்போது பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் பெரியசாமி செய்திருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...