கோவை மண்டலத்திற்கு கூடுதல் தொழிலாளர் ஆணையர் நியமனம்

கோவை மண்டலத்தின் புதிய கூடுதல் தொழிலாளர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சாந்தி கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் அலுவலகத்திற்கு வந்து கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.


கோவை: புதிய கோவை மண்டல கூடுதல் தொழிலாளர் ஆணையருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

கோவை மண்டல தொழிலாளர் ஆணையரகம் கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையரகத்தின் கூடுதல் தொழிலாளர் ஆணையராக தமிழரசி பணிபுரிந்து வந்தார்.

இதனிடையே அவர் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய கூடுதல் தொழிலாளர் ஆணையராக சாந்தி நியமிக்கப்பட்ட நிலையில், கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் அலுவலகத்திற்கு வந்த அவர் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு தொழிலாளர் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...