பல்லடத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்ட பயனாளிகளுக்கு வங்கி அட்டை வழங்கும் நிகழ்வு

பல்லடம், சாமளாபுரம், கரடிவாவி, பொங்கலூர் உள்வட்டங்களில் இருந்து 1239 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வங்கி அட்டை மற்றும் வாழ்த்து மடல்களை அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் வழங்கினர்.


திருப்பூர்: பல்லடத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்ட பயனாளிகளுக்கு வங்கி அட்டை வழங்கும் நிகழ்வில் செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று வழங்கினர்.

கடந்த தேர்தல் அறிக்கையில் அறவித்தது போல அனைத்து மகளிர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமான தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. 

முதல்கட்டமாக சுமார் 1 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இதில் விடுபட்ட மகளிர் மீண்டும் விண்ணப்பித்து இருந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வங்கி அட்டை வழங்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில் இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் வங்கி அட்டை வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.



இந்நிகழ்வில் தமிழ்நாடு செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம்,திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பன்னவர், பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 



பல்லடம், சாமளாபுரம், கரடிவாவி, பொங்கலூர் உள்வட்டங்களில் இருந்து 1239 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வங்கி அட்டை மற்றும் வாழ்த்து மடல்களை அமைச்சர்கள் வழங்கினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...