தொண்டாமுத்துர் பகுதியில் ஊருக்குள் புகுந்த யானைக் கூட்டம் - மக்கள் அச்சம்

அய்யாசாமி மலை அடிவாரத்தில் இருந்து நள்ளிரவில் வெளியேவந்த யானைகள் அருகாமையில் உள்ள கிராமப் பகுதிக்குள் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். அந்த யானைகளை மூன்று குழுக்களாக பிரிந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் மலை அடிவார கிராமங்களுக்கு அடிக்கடி யானைகள் வந்து செல்வது வழக்கமாகி இருக்கின்றன. தீத்திபாளையம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த யானைகள், உணவுக்காக தக்காளி வாழை மற்றும் ரேஷன் கடைகளிலிருந்து அரிசி உள்ளிட்டவற்றை உட்கொண்டு விட்டு அதிகாலை சென்று விட்டன.



இந்த நிலையில் யானைகள் மீண்டும் இரவு நேரத்தில் வானத்திலிருந்து வெளியே வந்திருக்கின்றன. நள்ளிரவு அய்யாசாமி மலை அடிவாரத்தில் இருந்து வெளிவந்த யானைகள் அருகாமையில் உள்ள தோட்டங்களுக்குள் உலா வந்து கிராமப் பகுதிகளுக்கும் சென்று இருக்கின்றன.

அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தந்த தகவலின் அடிப்படையில் வனத்துறை விரைந்து சென்று மூன்று குழுக்களாக பிரிந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

தற்பொழுது அந்த யானைகள் செல்லப்பகவுண்டன்புதூர் பகுதி வழியாக சென்று அடர் வனத்துக்கு முன்பாக உள்ள அடர்ந்த புதற்காட்டில் பஞ்சமடைந்திருக்கின்றன.

இந்த யானைகளை விரட்டுவதற்கு வனத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கின்ற நிலையில், மூன்று குழுக்கள் போதாது என்றும் கூடுதலாக வனத்துறை குழுக்களை அமைத்து யானைகளை விரட்ட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

வனத்தில் இருந்து யானைகள் அடிக்கடி வெளியே வருவதால் பெரும் பீதியில் பொதுமக்கள் ஆழ்ந்திருக்கின்றனர். வனத்தில் இருந்து வெளியே வந்த காட்டு யானைகளை விரட்டும் வனத்துறை இனி யானைகள் ஊருக்குள் வராத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றன.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...