உடுமலையில் சங்கரய்யாவுக்கு நினைவேந்தல் - ஏராளமானோர் பங்கேற்பு

மறைந்த முதுப்பெரும் தலைவர் சங்கரய்யா மறைவையொட்டி உடுமலையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் விவசாய சங்க நிர்வாகிள் மாதர்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.


திருப்பூர் ; திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றிய பகுதிகளில் மறைந்த தோழர் சங்கரய்யாவுக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றிய பகுதிகளில் குரல்குட்டை, பள்ளபாளையம், ஜல்லிபட்டி, கண்ணமநாயக்கனூர், எரிசினம்பட்டி, செல்லப்பம்பாளையம், தேவனூர்புதூர், கொடிங்கியம், சாலையூர், பெரியவாளவாடி சர்க்கார்புதூர், பொன்னாலம்மன் சோலை உட்பட பல்வேறு பகுதிகளில் CPIM கிளைகளில் சங்கரய்யா நினைவைப்போற்றி புகழஞ்சலிக் கூட்டங்கள் நடைபெற்றது.



இதில் CPIM உடுமலைஒன்றிய செயலாளர் கி.கனகராஜ், கமிட்டிஉறுப்பினர்கள் S.ஜெகதீசன், M.ரங்கராஜ், சு.தமிழ்த்தென்றல் M.T.அருண்பிரகாஷ், கிளைச்செயலாளர்கள் தட்சினாமூர்த்தி, செந்தில்குமார், ஆண்டமுத்து, மாணிக்கவாசகம், மணிக்குமார், ஆறுச்சாமி, பிரபுராம், இளையபாரதி, சபரி, மாசானி, சுப்புலட்சுமி கல்பனா, பானுமதி சத்யா உட்பட வாலிபர்சங்க, தொழிற்சங்க, வி.தொ.சங்க, மாதர்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தி அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...