தென்னை, வாழை பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் - இழப்பீடு வழங்க உடுமலை விவசாயிகள் கோரிக்கை

விளைநிலங்களில் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் காட்டு பன்றிகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே தென்னை மற்றும் வாழைப் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்திய நிலையில் உரிய இழப்பீடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தற்சமயம் மக்காச்சோளம் தென்னை வாழை உள்ளிட்டு பல்வேறு பயிர்கள் அதிக அளவு சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே இப்பகுதியில் இரவு நேரங்களில் காட்டுப் பன்றிகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகின்றது.



மேலும் கூட்டம் கூட்டமாக வரும் காட்டு பன்றிகள் தென்னங்கன்று வாழை தோட்டங்களில் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட வேளாண் துறையினர் கலாய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் காட்டுப்பன்றி நடமாட்டம் குறித்து சம்பந்தப்பட்ட வனத்துறையினருக்கு காட்டுப் பன்றிகளை விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதால் வனத்துறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் தற்பொழுது முடிவெடுத்துள்ளார்கள்.



எனவே விளைநிலங்களை தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் காட்டு பன்றிகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...