வால்பாறை அருகே விபத்தில் சிக்கிய பேருந்து - அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்

பேருந்தில் டீசல் டியூப் கட்டானதால் பிரேக் பிடிக்காமல் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பை உடைத்து தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்ததாக தெரிகிறது. இந்த விபத்து குறித்து வால்பாறை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கோவை: வால்பாறை அருகே நல்லகாத்து எஸ்டேட் சாலையில் வெள்ளமலை எஸ்டேட்டில் இருந்து வந்த பேருந்து, ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து தேயிலைத் தோட்டத்தில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 34 அரசு பேருந்து உள்ளது வால்பாறையிலிருந்து பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு பேருந்து சென்று வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள வெள்ளமலை எஸ்டேட் பகுதிக்கு பேருந்து ஒன்று சென்று வந்தது.

இந்த பேருந்தை ஓட்டுநர் வெங்கடேஷ்குமார் மற்றும் நடத்துநர் பாலு ஆகியோர் இயக்கி வந்தனர். பேருந்தில் 11 பயணிகள் வால்பாறைக்கு பயணித்து உள்ளனர்.

சுமார் 3 மணி அளவில் வால்பாறை அருகே நல்லகாத்து எஸ்டேட் சாலையில் வரும் பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் தடுப்பு சுவரை உடைத்து தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்தது. பேருந்தில் பயணம் செய்த 11 பேர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பேருந்தில் டீசல் டியூப் கட்டானதால் பிரேக் பிடிக்காமல் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பை உடைத்து தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்ததாக தெரிகிறது. இந்த விபத்து குறித்து வால்பாறை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...