பாரதியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு - உடுமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் தங்கப்பதக்கம்

பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம் மற்றும் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவ மாணவிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.


திருப்பூர்: பாரதியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கும் ரயில் உடுமலை அரசு கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

பாரதியார் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற தேர்வில் உடுமலை அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் 4 பேர் தங்கப்பதக்கம் மற்றும் இருவர் வெள்ளிப்பதக்கம் என 15 பேர் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து உள்ளனர். பாரதியார் பல்கலைக் கழகத்தில் 2022 - 23 ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற தேர்வு முடிவுகள் தொடர்பாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் உடுமலை அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் 15 பேர் அதிக மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்.

இளநிலை பட்ட வகுப்பு புள்ளியியல் துறை மாணவி பாண்டீஸ்வரி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். அரசியல் அறிவியல் துறையில் மாணவி வேதநாயகம் 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.

மின்வணிகவியல் துறையில் மாணவன் பிரபாகரன் 3-ம் இடத்தையும், மாணவி உதயமலர் 4-ம் இடத்தையும் பெற்றுள்ளனர். தாவரவியல் துறையில் மாணவி லிடியா 3-ம் இடத்தையும், ரமணி 10-ம் இடத்தையும் பெற்றுள்ளனர். இயற்பியல் துறையில் மாணவி அர்ஸ்மா 7-ம் இடத்தைப் பெற்றுள்ளார். வேதியியல் துறையில் மாணவன் பொன்ஜீவகன் 6-ம் இடத்தைப் பெற்றுள்ளார். தமிழ்த் துறையில் மாணவி சத்யசுப்ரபானு 10-ம் இடத்தையும் பிடித்துள்ளார்.

முதுநிலைப் பட்ட வகுப்பு சுற்றுலாவியல் துறையில் மாணவி ஷாலினி முதலிடம் பெற்றுத் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதேதுறையில் பத்மநாதன் 2-ம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார். புள்ளியியல் துறையில் மாணவி சந்தியா முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். முதுநிலை வேதியியல் துறையில் மாணவன் கிஷோர் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். முதுநிலை பொருளியல் துறையில் அபிதா 5-ம் இடத்தைப் பெற்றுள்ளார். முதுநிலை இயற்பியல் துறையில் அனிஸ் பாத்திமா 10-ம் இடத்தையும் பெற்றுள்ளார்.



பாராட்டு பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம் மற்றும் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவ மாணவிகளை கல்லூரி முதல்வர் சோ.கி. கல்யாணி, தமிழ்த்துறைத்தலைவர் மு. மதியழகன், வேதியியல் துறைத் தலைவர் மா. சிவகுமார், இயற்பியல் துறைத்தலைவர் ஆ.சந்தானம், அரசியல் அறிவியல் துறைத்தலைவர் ஆர். இளங்கோ, மின் வணிகவியல் துறைத் தலைவர் நா.கதிர்வேல்,பொருளியல் துறைத் தலைவர் ம.கோகிலா, புள்ளியியல் துறைத் தலைவர் ஜே. பூங்கோதை, தாவரவியல் துறைத்தலைவர் எம். ஜெயேந்திரன்,சுற்றுலாவியல் துறைத் தலைவர் அ.சு. விஜய் ஆனந்த் மற்றும் அனைத்துத் துறைப் பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள், முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை பொறுப்பாளர்கள் ஆகியோர் வாழ்த்திப் பாராட்டினார்கள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...