கோவையில் ஈட்ரைட் மில்லட் பைக்கத்தான்- மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து துறை, ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இணைந்து சிறுதானிய ஊட்டச்சத்து நன்மைகளை எடுத்துரைக்கும் வகையில் ஈட்ரைட் மில்லட் பைக்கத்தான் என்ற இருசக்கர விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


கோவை: சிறுதானிய ஆண்டை முன்னிட்டு அரசு சார்பிலும், பல்வேறு தனியார் நிறுவனங்கள் சார்பிலும் இந்த ஆண்டு முழுவதும் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து துறை, ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இணைந்து சிறுதானியங்களின் ஊட்டச்சத்து நன்மைகளைஎடுத்துரைக்கும் வகையில் ஈட்ரைட் மில்லட் பைக்கத்தான் என்ற இருசக்கர விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

இந்தப் பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும் இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, உக்கடம் பொள்ளாச்சி வழியாக சக்தி கல்லூரியை சென்றடைகிறது. இதில் 15க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...