இருட்டறையில் அடைத்து மாணவன் சித்தரவதை- பிரபல நேரு கல்வி குழுமத்தின் தலைவர் கைது


நேரு கல்வி குழும கல்லூரி வாளாகத்தில் இருட்டறையில் அடைத்து வைத்து எட்டு நாட்கள் மாணவனை சித்தரவதை செய்ததாக நேரு கல்விக்குழுமத்தின் தலைவர் கிருஷ்ணதாஸ் கேரள மாநிலம் திருச்சூரில் கைது செய்யப்பட்டார்.

கோவையில் பிரபல நேரு கல்விக்குழுமம் இயங்கி வருகிறது. ஏரோநாட்டிக்கல், டெக்னாலஜி, பொறியியல் உள்ளிட்ட பல்வேறு  பிரிவுகளில் இக்குழுமத்தின் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. 

இதேபோல கேரள மாநிலத்திலும் இந்த குழுமத்தின் சார்பில் கல்லூரிகள் இயங்கிவருகிறது. இந்த கல்விக்குழுமத்தின் தலைவராக கிருஷ்ணதாஸ் உள்ளார். இந்த கல்விக் குழுமத்திற்கு சொந்தமான கல்லூரிகளில் மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இந்நிலையில் கேரள மாநிலம் திருச்சூரில் பாம்பாட்டி என்கிற பகுதியில் நேரு அகாடமி சட்டக்கல்லூரியில் கடந்த ஜனவரி மாதம் விஷ்ணுபினராய் என்கிற மாணவனை கல்லூரி நிர்வாகம் சித்தரவதை செய்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதே கல்லூரியில் பயின்று வந்த திருச்சூர் எருமப்பட்டியை சேர்ந்த சக்கீர் சவுகத் என்கிற மாணவனை கல்லூரி வளாகத்தில் உள்ள இருட்டறையில் எட்டு நாட்களுக்கு மேலாக அடைத்துவைத்து சித்தரவதை செய்துள்ளனர்.

இதனையடுத்து தப்பி வந்த மாணவனின் புகாரின் பேரில் நேரு கல்விக்குழுமத்தின் தலைவர் கிருஷ்ணதாஸ் மற்றும் கல்லூரி சட்ட ஆலோசகர் சுசித்திரா, வல்சன்குமார் மற்றும் பேராசிரியர் சுகுமார் ஆகியோரை திருச்சூர் எருமப்பட்டி காவல்துறையினர் கைதுசெய்தனர்.

கோவையில் பிரபலமாக செயல்பட்டு வரும நேரு கல்விக்குழுமத்தின் தலைவர் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...