டெங்கு, சிக்கன் குனியாவிற்கு விரைவில் தடுப்பூசி - பொள்ளாச்சியில் இம்யூனாலாஜிக்கல்ஸ் நிறுவன இயக்குனர் பேட்டி

இந்த காலகட்டத்தில் வனங்களை பாதுகாப்பது மிகவும் அவசியம். வனவிலங்குகள் வெளியில் வர தொடங்கியுள்ளது. இதனால் மிகப்பெரிய அளவில் நோய் பரவும் அபாயம் ஏற்படும் என்று இம்யூனாலாஜிக்கல்ஸ் நோய் தடுப்பு நிறுவனத்தின் இயக்குனர் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார்.


கோவை: கெரோனோ காலகட்டத்தில் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் இம்யூனாலாஜிக்கல்ஸ் நோய் தடுப்பு நிறுவனம் மத்திய அரசின் அனுமதி பெற்று கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் 60% தடுப்பூசிகளை அனுப்பி கொரோனா நோய் தடுப்பில் பெரும் பங்காற்றியது.

இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஆனந்த் குமார் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக பொள்ளாச்சி ரோட்டரி தன்னார்வ அமைப்பு மூலம் தொழில்சார் மேலாண்மை விருது வழங்கும் நிகழ்ச்சி பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்றது.



இந்தநிகழ்வில் ரோட்டரி தன்னார்வ அமைப்பு சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.



பின்னர் செய்தியாளர்களுக்கு ஆனந்த்குமார் அளித்த பேட்டியின் போது, உலகிலேயே அதிக அளவில் பல்வேறு நோய்களுக்கு தடுப்பூசி இந்தியாவில் தான் தயாரிக்கப்படுகிறது. இந்தாண்டு 3 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் டெங்கு, சிக்கன் குனியா, ஜிக்கா மற்றும் விலங்குகளுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும், தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனாவால் எந்த பயமும் இல்லை என்றும் பாதிப்பும் இருக்காது என்றும் அவர் கூறினார்.

உலகிலேயே 60% தடுப்பூசிகள் இந்தியாவில் தான் தயாரிக்கப்படுகிறது. மேலும் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. வரும் காலத்தில் எந்த வகையான வைரஸ் தாக்கினாலும் இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க முடியும். மேலும் இந்த காலகட்டத்தில் வனங்களை பாதுகாப்பது மிகவும் அவசியம். வனவிலங்குகள் வெளியில் வர தொடங்கியுள்ளது. இதனால் மிகப்பெரிய அளவில் நோய் பரவும் அபாயம் ஏற்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...