வடமதுரையில் தபால் நிலையம் முன்பு ப்ளீச்சிங் பவுடர் போட பகுதி மக்கள் கோரிக்கை

மழை காரணமாக தபால் நிலையம் அருகே உள்ள சாக்கடை நிரம்பி வழிந்து தபால் நிலையம் முன்பு உள்ள சாலையில் வழிந்து ஓடியது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.


கோவை: கோவையில் துடியலூரை அடுத்துள்ள வடமதுரை பகுதியில் தபால் நிலையம் அமைந்துள்ளது.



இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் மழை பெய்தது. இதனால் அந்த தபால் நிலையம் அருகே உள்ள சாக்கடை நிரம்பி வழிந்து தபால் நிலையம் முன்பு உள்ள சாலையில் வழிந்து ஓடியது.



இதனால் அந்த பகுதி முழுவதும் சாக்கடை சேற்றால் சூழப்பட்டிருந்தது. பின் தூய்மை பணியாளர்கள் அதை சுத்தம் செய்தனர். இருப்பினும் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே ப்ளீச்சிங் பவுடர் அங்கு போட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் இன்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...