தாராபுரம் மக்காச்சோள விதை பண்ணையில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

தொப்பம்பட்டி கிராமத்தில் உளுந்து வம்பன் 11 மற்றும் பரப்பாளையம் கிராமத்தில் நிலக்கடலை தரணி, நிலக்கடலை கதிரிலெப்பாச்சி, வீரிய ஒட்டு மக்காச்சோளம் கோ 8 ரகங்களை கொண்டு விதை பண்ணைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, விதை பண்ணைகள் அமைத்து தரமான விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுவதை விதைச்சான்று அலுவலர்கள் பயிற்சி பருவம் பூக்கும் பருவம் மற்றும் அறுவடை பருவங்களில் வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட கலவன்கள் எதுவும் இல்லை என்பதை ஆய்வு செய்து உறுதிப்படுத்தினர்.

புறந்தூய்மை முளைப்புத்திறன் ஈரப்பதம் மற்றும் பிற இன கலப்பு ஆய்வு செய்யப்பட்டு தரமானது என ஆய்வறிக்கை பெறப்படுகிறது. ஆய்வு அறிக்கை பெற்ற பின் சான் டிரட்டைகள் பொருத்தி தரமான விதைகள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. தாராபுரம் வட்டாரத்தில் தொப்பம்பட்டி கிராமத்தில் உளுந்து வம்பன் 11 மற்றும் பரப்பாளையம் கிராமத்தில் நிலக்கடலை தரணி நிலக்கடலை கதிரிலெப்பாச்சி வீரிய ஒட்டு மக்காச்சோளம் கோ 8 ரகங்களை கொண்டு வேளாண்மை பொது மேலாளர் டான்சிடா விதை உற்பத்தியாளர்களாக விதை பண்ணைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்போது விதை சான்று அலுவலர் மனோஜ் குமார் உதவி அலுவலர் தேசிங்கு ராஜன் ஆகியோர் வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விதைப்பண்ணை விவசாயிகளுக்கு தொழில் நுட்பங்கள் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...