உடுமலையில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

பேரணியில் பங்கேற்ற மாணவிகள் மித வேகம் மிக நன்று, தலைக்கவசம் உயிர்கவசம், படியில் பயணம் நொடியில் மரணம் போன்ற விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி மக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு, உடுமலை வக்கீல்கள் சங்கம், சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறை, ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி இணைந்து சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.

பேரணிக்கு உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், சார்பு நீதிபதியுமான எம்.மணிகண்டன் தலைமை வகித்தார். அதைத்தொடர்ந்து சாலை பாதுகாப்பு உறுதிமொழி வாசிக்கப்பட்டது. பின்னர் பேரணியை சார்பு நீதிபதி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.



பேரணி நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கி அரசு மருத்துவமனை, மார்கெட் சாலை வழியாக சென்று பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. அப்போது மாணவிகள் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், மித வேகம் மிக நன்று, தலைக்கவசம் உயிர்கவசம், படியில் பயணம் நொடியில் மரணம் போன்ற விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி மக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தினர்.

அத்துடன் போக்குவரத்து விதிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பேரணியில் மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.எஸ்.பாலமுருகன், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் கே.விஜயகுமார், ஆர் மீனாட்சி, வக்கீல் சங்க தலைவர் மனோகரன், செயலாளர் ராஜேந்திரன், அரசு வழக்கறிஞர்கள் சேதுராமன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட வக்கீல்களும், போலீஸ் சார்பில் சட்டம் ஒழுங்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவராஜ், போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் உள்ளிட்ட போலீசார் ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...