வேலம்பட்டி பகுதியில் டோல் கேட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் முற்றுகை

கட்டண சாலை என்பதற்கான எந்தவித கட்டுமானங்களும் செய்யப்படாமல், ஏற்கனவே இருந்த சாலை மீது எந்த மாற்றமும் செய்யாமல், அப்படியே சாலை அமைத்து நான்கு வழிச்சாலை என்கிற தோற்றத்தை மட்டுமே உருவாக்கி உள்ளனர் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரை அடுத்த அவிநாசிபாளையம் அருகே உள்ள வேலம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள், கிராம மக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வரை வரையிலான நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்பட்டு தற்போது வேலம்பட்டி அருகே சுங்கச்சாவடியை திறந்து சுங்கக் கட்டணம் வசூல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மொத்த நீளமான 32 கிலோ மீட்டரில் 20 கிலோ மீட்டர் தூரம் திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள் இந்த சாலை செல்கிறது. கட்டண சாலை என்பதற்கான எந்தவித கட்டுமானங்களும் செய்யப்படாமல் ஏற்கனவே இருந்த சாலை மீது எந்த மாற்றமும் செய்யாமல், அப்படியே சாலை அமைத்து நான்கு வழிச்சாலை என்கிற தோற்றத்தை மட்டுமே உருவாக்கி உள்ளனர்.



மேலும், நெடுஞ்சாலைத்துறையினர் நீர்நிலை ஆக்கிரமிப்பை செய்து சுங்கச்சாவடி அமைத்துள்ளனர். திட்டமிட்டு சுங்கச்சாவடியை அமைத்து வசூலிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதை கண்டித்தும், அவினாசிபாளையத்தில் உள்ள வேலம்பட்டி டோல்கேட் வேண்டாம் என வலியுறுத்தியும், சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கம், வடக்கு அவிநாசி பாளையம் கிராம மக்கள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வேலம்பட்டி பகுதியில் டோல் கேட் வேண்டாம் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். இதனால் வேலம்பட்டி டோல்கேட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...