தனிநபரின் அராஜங்கத்தை கண்டித்து பல்லடம் அருகே அருள்புரத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் தர்ணா போராட்டம்

சிவகணேஷ் என்பவர் தனது இரண்டு ஆட்டோக்களை தண்ணீர் பந்தல் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதாக ஆட்டோ ஓட்டுநர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரத்தில் தண்ணீர் பந்தல் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் கடந்த 24 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் பொது நல சங்கம் என்ற பெயரில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.

இங்கு சுமார் 20 ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ள நிலையில், அதே பகுதியில் சிவகணேஷ் என்பவர் தனது இரண்டு ஆட்டோக்களை தண்ணீர் பந்தல் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதாகவும், இதனால் 20 ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், சங்கத்தின் சார்பில் பல்லடம் காவல் நிலையத்திலும், ஆட்டோ ஓட்டுநர்கள் புகார் அளித்திருந்தனர்.



ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைகளை ஏற்காமல் சிவ கணேஷ் என்பவர் தொடர்ச்சியாக வாகனத்தை நிறுத்துவதை கண்டித்து, இன்று தண்ணீர் பந்தல் பேருந்து நிறுத்தத்தில் இருபதுக்கும் மேற்பட்ட ஆட்டோக்களை நிறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், சிவ கணேஷ் என்ற தனிநபரின் அராஜகப் போக்கால் 20 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அவரது வாகனத்தை அப்புறப்படுத்தினால் மட்டுமே தர்ணா போராட்டத்தை கைவிட போவதாக தெரிவித்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...