பல்லடத்தில் தாய் அறக்கட்டளை சார்பில் தை மகளே வருக திருவிழா கோலாகலமாக கொண்டாட்டம்

உரி அடித்தல், இளவட்டக்கல் தூக்குதல் என பாராம்பரிய விளையாட்டுகள் திருவிழாவில் களைக்கட்டின. இதில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு தங்களது தனித்திறனை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்.


திருப்பூர்: உழுது உண்டி கொடுத்து நிலம் பேணி மக்கள் அறம் காக்கும் உழவர் குடியை போற்றும் வகையிலும், உடையும் உறைவிடமும் கொடுத்து நம்மை காக்கும் இயற்கை தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், நாட்டுப்புற கலைகள் மற்றும் பண்பாட்டை காக்கும் வகையிலும், தாய் அறக்கட்டளை சார்பில் தை திருநாளை வரவேற்கும் வகையில் 11 ஆம் ஆண்டு "தை மகளே வருக" திருவிழா பல்லடத்தில் உள்ள வனாலயத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, எழுத்தாளர் பவா செல்லதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். காலை இயற்கை வழிபாட்டுடன் பொங்கல் விழா தொடங்கிய நிலையில் மரபு வழி பொருள்களின் கண்காட்சி, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் சந்தை, மரபுசார் விளையாட்டு போட்டிகளோடு விழா தொடங்கியது.



வேங்கை மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள், ஓவியங்கள், பழங்காலத்தில் உழவுத் தொழிலுக்கு பயன்படுத்திய ஏர் கலப்பை, உழவுப் பொருட்கள், போர் வாள்கள் என பழமையான பொருட்களின் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.



இதன் தொடர்ச்சியாக உரி அடித்தல், இளவட்டக்கல் தூக்குதல் என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாரம்பரிய விளையாட்டுக்களில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.



இதன் தொடர்ச்சியாக பறை இசைக்கு ஏற்ப குதிரையின் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் நிமிர்வு கலையகம் சார்பில் பறை இசையோடு தொடங்கி சமூக செயற்பாட்டாளர்கள், இயற்கை உழவுத் தொழில் புரிவோர், இசை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.



விழாவின் இறுதியாக அவிநாசி தீரன் கலைக்குழு சார்பில் கம்பத்து ஆட்டமும் நடைபெற்றது. இந்தவிழாவை பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்தோடு வந்து விழாவினை கண்டுகளித்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...