பெதம்பம்பட்டியில் ராமர் வேடம் அணிந்து குழந்தைகள் அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் வழங்கினர்

கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு பாகுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென தற்பொழுது அனைவருக்கும் குழந்தைகளுக்கு ராமர் வேடம் அணிந்து அழைப்பிதழ் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகின்றது என்று இந்து அமைப்பு நிர்வாகி ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள பெதம்பம்பட்டியில் அயோத்தி ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த சேஷத்ர டிரஸ்ட் வேண்டுகோளுக்கு இணங்க இந்து அமைப்புகள் சார்பில் நால்ரோடு, பொள்ளாச்சி சாலை, தாராபுரம் சாலை பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் அருகில் உள்ள குடியிருப்புகளில் குழந்தைகள் ராமர் வேடம் அணிந்து அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் மற்றும் அழைப்பிதழ் வழங்கினர்.



அப்போது இந்து அமைப்புகள் சார்பில் ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம் என்று கோசங்கள் இட்டவாறு சென்றனர். மேலும் இந்து அமைப்பு நிர்வாகி ஜெயபிரகாஷ் கூறும் பொழுது, பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின் தற்பொழுது பல வருடங்களுக்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகின்ற 22 ஆம் தேதி கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.



இந்த நிலையில் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு பாகுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென தற்பொழுது அனைவருக்கும் குழந்தைகளுக்கு ராமர் வேடம் அணிந்து அழைப்பிதழ் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...