வால்பாறையில் அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கம்

வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளுக்கு செல்வதற்காக 38 பேருந்துகள், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி, கோவை, பழனி, திருப்பூர், சேலம், மன்னார்காடு ஆகிய வெளியூர் செல்லக்கூடிய ஆறு பேருந்துகள் என மொத்தம் 44 பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.

கோவை: தமிழகத்தில் போக்குவரத்து துறையில் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஒன்பதாம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக போக்குவரத்து துறை ஓட்டுனர் தொழிற்சங்கங்கத்தினர் தெரிவித்த நிலையில் இன்று கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அனைத்து பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.

வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளுக்கு செல்வதற்காக 38 பேருந்துகள், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி, கோவை, பழனி, திருப்பூர், சேலம், மன்னார்காடு ஆகிய வெளியூர் செல்லக்கூடிய ஆறு பேருந்துகள் என மொத்தம் 44 பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.

பொதுமக்கள் எந்த ஒரு பாதிப்பும் இன்றி காலையில் வெளியூர் செல்வதற்கும், மாணவர்கள் பள்ளி செல்வதற்கும் பேருந்துகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் போக்குவரத்து பணிமனை முன்பு அசம்பாவிதங்கள் நடக்காத வண்ணம் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...