அவிநாசியில் மிகவும் பழமையான வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

அனுமன் ஜெயந்தி விழாவில் சிலம்பம், வாள் வீச்சு, நெருப்பு பந்து சுற்றுதல் மற்றும் களரி ஆகிய வீர விளையாட்டுகள் நடைபெற்றன. இதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சுமார் 1200 வருடம் பழமையான ஸ்ரீ வியாஸ ராஜர் எனும் அரசரால் நிறுவப்பட்ட வீர ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரசித்து பெற்று விளங்குகிறது. இங்கு வருடா வருடம் பக்தர்கள் மூலம் நடத்தபடுகின்ற அனுமன் ஜெயந்தி திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

நேற்று காலை மூலமந்திர ஹோமம், ஆராதனை நிகழ்ச்சியுடன் அனுமன் ஜெயந்தி நிகழ்ச்சி துவங்கியது. அதைத்ததாடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை வில்லிபாரத தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அதிகாலை வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.



தொடர்ந்து சுந்தரகாண்ட அனுமன் சிறப்பு சொற்பொழிவும், அன்னதானமும் நடைபெற்றது. மாலை பக்தி பஜனைகள் நடைபெற்றது.



விழாவின் நிறைவாக, அழிந்து வரும் கிராமிய வீர விளையாட்டுகளை சிறுவர், சிறுமிகள், சிலம்ப விளையாட்டு வீரர்கள், பள்ளி கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட சிலம்பம், வாழ் வீச்சு, நெருப்பு பந்து சுற்றுதல் மற்றும் களரி ஆகிய வீர விளையாட்டுகள் நடைபெற்றது.



அதை தொடர்ந்து உற்சவர் ராமர் சீதை லட்சுமணன் சுமந்த அனுமன் திருவீதி உலா நடைபெற்றது. பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...