தாராபுரத்தில் பூர்வகுடி வள்ளுவர் சமுதாயத்தின் சார்பில் திருவள்ளுவர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தாராபுரத்தில் பூர்வகுடி வள்ளுவர் சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பத்தினர், திருவள்ளுவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இந்தவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது.


திருப்பூர்: அய்யன் திருவள்ளுவரின் 2055 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் வாழும் வள்ளுவர் குல இளைஞர் நலச் சங்கத்தின் சார்பில், சமுதாய பொங்கல் விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பூர்வ குடி வள்ளுவர் சமுதாயத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இச்சமுதாயத்தின் சார்பில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.



அதன் அடிப்படையில் 2024 ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி, தாராபுரத்தில் பூர்வ குடி வள்ளுவர் சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பத்தினர், திருவள்ளுவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.



விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது. இவ்விழாவினை வாழும் வள்ளுவர் குலஇளைஞர் நலச்சங்கத்தின் தலைவர் ஓம்.பிரகாஷ், துணைத் தலைவர் கார்வேந்தன், செயலாளர் பிரபாகரன், துணைச் செயலாளர் மோகன், பொருளாளர் பிரகாஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...