கிழவன் காட்டூர் கிராமத்தில் பாமக சார்பில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்

திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் மாட்டுப்பொங்கல் விழா, பாரம்பரியமான முறையில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரின் அறிவுரைபடி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டதாக மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சி கிழவன் காட்டூர் கிராமத்தில் திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் மாட்டுப்பொங்கல் பாரம்பரியமான முறையில் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி அறிவுரை படி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதுகுறித்து, திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி கூறுகையில், வருடம் முழுவதும் விவசாயத்துக்கு பெரிதும் உதவியாக உள்ள கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாடுகளை அலங்கரித்தும் 18 வகை உணவுகள் படைத்து பாரம்பரியமான முறையில் மாட்டு பொங்கலை கொண்டாடி வருகிறோம்.



மேலும் விவசாயிகளுக்கு உற்ற துணையாக உள்ள ஒரே தலைவர் மருத்துவர் ராமதாஸ் தான். விவசாயிகளுக்கான தனி நிதிநிலை போடப்பட்டு விவசாயிகளின் நலனில் அக்கறையுள்ள தலைவராக உள்ளார் என தெரிவித்தார்.

இந்தவிழாவில், மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, மேற்கு மாவட்ட கொள்கை விளக்க அணி தலைவர் ராமலிங்கம், உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவபாலு, ஊடக பேரவை மாவட்ட செயலாளர் கனகராஜ், பாமக நிர்வாகிகள் தண்டபாணி, குமார், ஹரிஹரன், கார்த்திக் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...