தாராபுரத்தில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்தநாளைமுன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு அதிமுகவினர், திருப்பூர் புறநகர் மாவட்ட நகர செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107.வது பிறந்தநாள் விழா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அண்ணாசிலை அருகில் எம்.ஜி.ஆர் திருவுருவப்படத்திற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட நகர செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட கழக பொருளாளர் சின்னப்பன் (எ) பழனிச்சாமி முன்னிலையில் வடக்கு தெரு காமராஜபுரத்திலிருந்து தாரை தப்பட்டை இசை முழக்கத்துடன் உற்சாகமாக பேரணியாக சின்னக் கடைவீதி கடைவீதி பூக்கடை மொக்கை சந்திப்பு வழியாக பழைய நகராட்சி வளாகம் முன்பு எம்.ஜி.ஆர். திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர் அங்கு அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது.



இதேபோன்று தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 107 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் பங்க்கு மகேஷ் தலைமையில் தேவேந்திர தெருவில் எம்.ஜி.ஆரின் 10 ஆடி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



இதன் தொடர்ச்சியாக 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



இதில் அதிமுக கட்சியின் நிர்வாகிகள் இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை அணியினர், மகளிர் அணியினர் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...