40 அடி ஆழ கிணற்றில் விழுந்த காட்டு யானை மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் அனுப்பப்பட்டது, வனத்துறையின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள், வன ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் பாலமலை அருகே உள்ள கோவனூர் என்ற கிராமத்தின் அருகில் செவ்வாய்கிழமை இரவு காட்டு யானை கூட்டம் ஓன்று புகுந்தது. அப்போது அங்கிருந்த பயன்படுத்தப்படாத தோட்டத்து கிணற்றில்  10 வயது மதிக்கதக்க ஆண் யானை தவறி விழுந்தது.

 

இந்நிலையில் யானையின் பிளிறல் சப்தம் கேட்ட அக்கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் புதன்கிழமை யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 40 அடி கிணற்றில் விழுந்த காட்டு யானையை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன, எனினும் இரவு நேரம் ஆனதாலும், மற்ற காட்டு யானை கூட்டம் வந்ததாலும் யானையை மீட்கும் பணியை ஒத்தி வைத்தனர். முதல் உதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வியாழக்கிழமை காலை 6 மணி முதல் யானையை மீட்கும் பணி துவங்கியது.



வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் ஆகியோர் இணைந்து யானையை கிணற்றில் இருந்து மீட்கும் பணியை துவங்கினர், மேலும் வனத்துறை மருத்துவர்கள் அசோகன், வியஜராகவன் ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் முதலில் யானைக்கு  மயக்க மருந்து செலுத்தினர். பின்னர் கிணற்றின் உள்ளே சென்ற வனத்துறையினர் கிரேன் உதவியுடன் யானையை கட்டி பாதுகாப்பாக மேலே கொண்டு வந்தனர். பின்னர் யானையின் உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்துகளும் ஊசிகளும் போடப்பட்டது.யானையின் கால்களில் அடியேதும் படாததால் மீண்டும் வனப்பகுதிக்குள் யானையை அனுப்ப முடிவு செய்த வனத்துறையினர் கட்டப்பட்ட கயிறுகளை அவிழ்த்த உடன் யானை வனப்பகுதிக்குள் ஓடிச்சென்றது. 

இது குறித்து மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியன் கூறுகையில் மீட்பு பணி சிறப்பாக நடைபெற்றதாகவும், யானையின் கால்களில் அடி படாததால் மீண்டும் வனப்பகுதிக்குள்ளேயே அனுப்பியதாக கூறிய அவர் தனி குழு அமைக்கப்பட்டு அந்த யானை அதன் கூட்டத்துடன் சேர்க்கப்படும் என தெரிவித்தார். 40 அடி ஆழ கிணற்றில் விழுந்த யானையை 30 மணி நேரத்தில் உயிருடன் மீட்டு வனப்பகுதிக்குள் அனுப்பிய வனத்துறையினருக்கு பொதுமக்கள் விலங்கு நல ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...