கற்பகம் நிகர்நிலை பல்கலைக் கழகத்திற்க்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை காவல் துணைக் தலைவர் ஸ்ரீ மோசஸ் தினகரன் வருகை

கற்பகம் நிகர்நிலை பல்கலைக் கழகத்திற்கும், ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், காவல் துணைக் தலைவர் அவர்களும் கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழக பதிவாளர் அவர்களும் கையெழுத்திட்டனர்.


கோவை: மத்திய ரிசர்வ் போலீஸ் படையின், காவல் துணைக் தலைவர் ஸ்ரீ மோசஸ் தினகரன் அவர்கள், கற்பகம் நிகர்நிலை பல்கலைக் கழகத்திற்க்கு இன்று வருகை புரிந்தார்.

கற்பகம் நிகர்நிலை பல்கலைக் கழகத்திற்கும், ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், காவல் துணைக் தலைவர் அவர்களும் கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழக பதிவாளர் அவர்களும் கையெழுத்திட்டனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது கற்பகம் நிகர்நிலை பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் பி. வெங்கடாசலபதி, அவர்கள் உடனிருந்தார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கவும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை காவலர்களின் மூன்று குழந்தைகளுக்கு வருடா வருடம் இலவச கல்வி வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 350 மாணவர்கள் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில், லெப்டினன்ட் எஸ்.நித்யா வரவேற்றுப் பேசினார். சைத் பாய், உதவி கமாண்டன்ட் அவர்கள் சிஆர்பிஎஃப் வேலை வாய்ப்புகள் குறித்து சிறப்புரை ஆற்றினார். கேப்டன் டாக்டர் கே.பி. ஸ்ரீதர் நன்றியுரை வழங்கினார். S.K.தினேஷ், உதவி கமாண்டன்ட் மற்றும் காவல் உதவி துணை-ஆய்வாளர்கள் ஏற்பாட்டுக் குழுவிற்கு உறுதுணையாக இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...