கோவை ஆா்.எஸ்.புரத்தில் ஓவியக் கண்காட்சி – ஓவியங்கள் வரைந்து சிறுவர்கள் அசத்தல்

கோவையைச் சோ்ந்த ஓவிய ஆசிரியரான ஆசிதா ஜூவாரி என்பவர், தனது மாணவர்களின் கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஓவியக் கண்காட்சிகளை நடத்தி வருகிறார்.


கோவை: சிறுவா்களின் கலைத் திறனை ஊக்குவிக்கும் வகையில், கோவை ஆா்.எஸ்.புரத்தில் ஓவியக் கண்காட்சி நேற்று (ஜனவரி 21) நடைபெற்றது. கோவையைச் சோ்ந்தவா் ஆசிதா ஜூவாரி (43), ஓவிய ஆசிரியா். ஆா்டிஸ்டிக் கலை வகுப்புகளை நடத்தி வரும் இவா், தனது மாணவர்களின் கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஓவியக் கண்காட்சிகளை நடத்தி வருகிறார்.



இதன் தொடா்ச்சியாக, சிறுவா்களிடையே கலைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் நேற்று (ஜனவரி 21) நடைபெற்ற ஓவியக் கண்காட்சியை பிரபல நகை வடிவமைப்பாளரும், ஃபேஷன் டிசைனருமான அபா்ணா சுங், ஹோட்டல் கிராண்ட் ரீஜென்ட் இயக்குநா் சாந்தினி ஆகியோர் பங்கேற்று தொடங்கிவைத்தனர். கண்காட்சியில், 4 வயது முதல் 18 வயது வரையிலான மாணவா்கள் வரைந்த விலங்குகள், இயற்கைக் காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில், சிறுவா்கள், இளைஞா்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஓவியங்களைக் கண்டு ரசித்தனர்..

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...