தாராபுரம் மற்றும் காங்கேயம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் வெளியீடு

தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 786 வாக்காளர்களும், காங்கேயம் பொதுத்தொகுதியில் இரண்டு லட்சத்து 59 ஆயிரத்து 652 வாக்காளர்களும் உள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதி மற்றும் காங்கேயம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் இன்று கோட்டாட்சியர் செந்திலரசன் தலைமையில் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி, காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி ஆகியோர் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட், பிஜேபி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். அப்போது தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 786 வாக்காளர்களும், காங்கேயம் பொதுத்தொகுதியில் இரண்டு லட்சத்து 59 ஆயிரத்து 652 வாக்காளர்களும், தாராபுரம் தொகுதிக்கு உட்பட்டு மூன்றாம் பாலினத்தார் 12 பேரும் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் மூன்றாம் பாலினம் 20 பேரும் இரு தொகுதிகளிலும் சேர்த்து 32 பேர் மூன்றாம் பாலினத்தவர் சேர்க்கப்பட்டுள்ளனர் காங்கேயம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் வாக்காளர்கள் 5 லட்சத்து 18 ஆயிரத்து 438 வாக்காளர்கள் இறுதி வாக்காளர்களாக அறிவிக்கப்பட்டனர் மேலும் தேர்தல் வரவுள்ளதால் 18 வயது உள்ள வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...