ஐந்தாவது வாரமாக கோவை மாநகராட்சியின் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெறுமா என்று மக்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் நிர்வாக காரணத்தால், குறை தீர்க்கும் நாள் கூட்டம் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நாளையும் நடைபெறாது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பொது பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.

கடைசியாக 2023-டிசம்பர் 12ம் தேதி இந்த கூட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து வந்த 4 செவ்வாய்க்கிழமைகளில் (19.12.23, 26.12.23, 2.01.24, 9.01.24) இந்த கூட்டம் நிர்வாக காரணங்களால் நடைபெறவில்லை. அதன் பின்னர் 15.1.2024 பொங்கல் பண்டிகை என்பதால் அரசு விடுமுறை அன்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாளை (23.1.24) இந்த கூட்டம் நடைபெறுமா என்று மக்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் நிர்வாக காரணத்தால் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நாளையும் நடைபெறாது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் விடுமுறை தவிர்த்து பார்த்தல் தொடர்ந்து 5 வாரமாக இந்த கூட்டங்கள் நடைபெறாமல் உள்ளது. வழக்கமாக இந்த கூட்டங்களை மேயர் கல்பனா தலைமை தங்குவார். அவர் இல்லையென்றால், துணை மேயர் வெற்றி செல்வன் தலைமை தங்குவார். அவரும் இல்லாத சமயங்களில் மாநகராட்சி ஆணையர், துணை ஆணையர்கள் இந்த கூட்டத்தில் மக்கள் குறைகளை கேட்பார்கள். ஆனால் தொடர்ந்து 5 முறை கூட்டம் நடைபெறாமல் உள்ளது புதிதாக உள்ளது. ஒவ்வொரு வாரமும் குறைந்தது சுமார் 30 கோரிக்கை மனுக்களாவது மக்களிடம் இருந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...