வடுகபாளையத்தில் மது போதையில் அதிவேகமாக காரை இயக்கிய நபரின் செல்போனை பறித்ததால் சாலையில் படுத்து அட்டகாசம்

மதுபோதையில் அதிவேகமாக காரை இயக்கிய காரணத்தால், செல்போனை பறித்துக் கொண்டு போலீசார் தராததால் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி, பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் படுத்துக்கொண்டு அட்டகாசம் செய்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையத்தில் அதிவேகமாக மது போதையில் காரை இயக்கி சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சென்றதாக கூறி பாதிக்கப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் அதிவேகமாக காரை இயக்கிய நபரின் செல்போனை பிடுங்கி வைத்ததாக கூறப்படுகிறது.

மேலும் மது போதையில் காரில் வந்த நபர் அந்த இருசக்கர வாகன ஓட்டியிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.



இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



மேலும் செல்போனை பறித்துக் கொண்டு தராததால் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் படுத்துக்கொண்டு அட்டகாசம் செய்துள்ளார். மேலும் அங்கு வந்த போதை ஆசாமியின் நண்பர்கள் அந்த இருசக்கர வாகன ஓட்டியை தகாத வார்த்தைகளால் திட்டியும், அடிக்கவும் முயன்றுள்ளனர்.



இதனையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனிடையே போதை ஆசாமி சாலையில் படுத்து அட்டகாசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...