தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தில் தூய்மைப்பணியாளர்கள் பயன்பெற கோவை மாநகராட்சி கமிஷனர் அழைப்பு

தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தில் செப்டிக் டேங்க், பொது, சமுதாய மற்றும் நிறுவன கழிப்பறைகளை சுத்தம் செய்தல், கழிவுநீர் குழாய் பராமரிப்பு, மழைநீர் வடிகால் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் துாய்மை பணியாளர்கள் பயன்பெறலாம் என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி கமிஷனர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், துாய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தில் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசானது துாய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை, 2022ம் ஆண்டு டிச., மாதம் அறிமுகம் செய்தது.

இத்திட்டத்தில், செப்டிக் டேங்க், பொது, சமுதாய மற்றும் நிறுவன கழிப்பறைகளை சுத்தம் செய்தல், கழிவுநீர் குழாய் பராமரிப்பு, மழைநீர் வடிகால் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் துாய்மை பணியாளர்கள் பயன்பெறலாம். குழந்தைகளுக்கு கல்வி உதவி, உடல் நலம் பரிசோதனை, அடையாள அட்டை, காப்பீடு, பணியில் பாதுகாப்பு, பாதுகாப்பு திறன் பயிற்சி, பிற நலத்திட்டங்களுடன் இணைப்பு, நியாயமான ஊதியம் என பல்வேறு நன்மைகளை இதனால் பெறமுடியும்.

இந்நிலையில், கோவை மாநகராட்சி பகுதிகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில், தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தில் தங்களது பெயர்களை வரும், 31ம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...