பல்லடத்தில் தாக்கப்பட்ட பத்திரிக்கையாரின் உடல் நலன் குறித்து அமைச்சர் சாமிநாதன் நேரில் விசாரிப்பு

செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஜனநாயகத்தின் நான்காவது தூண்களான பத்திரிக்கையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் மன வருத்தம் அடைந்துள்ளார் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.


கோவை: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கோவை கங்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் பத்திரிக்கையாளர் நேசபிரபுவின் உடல் நலன் குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் பார்வையிட்டு கேட்டறிந்தார்.



இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்,



'நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் பல்லடம் தாலுக்கா செய்தியாளர் நேசபிரபு நேற்று இரவு ஒரு சில நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டு கோவை கங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல் நலன் நல்ல முன்னேற்றம் அடைந்துவருவதாக ஆறுதலான செய்தியை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதில் தொடர்புடைய சரவணன் மற்றும் இன்னொருவர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஜனநாயகத்தின் நான்காவது தூண்களான பத்திரிக்கையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் மன வருத்தம் அடைந்துள்ளார்.

முதல்வரின் உத்தரவின்படி பத்திரிக்கையாளர் நல வாரியத்தின் மூலம் 3 லட்ச ரூபாய்க்கான காசோலை நேரடியாக வழங்கப்படுகிறது. தாக்கப்பட்ட பத்திரிக்கையாளருக்கான முழு மருத்துவ செலவையும் அரசு ஏற்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல்கட்டமாக நல வாரியம் மூலம் ரூ.3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதனை அடுத்து முதலமைச்சர் அறிவித்த 3 லட்சம் ரூபாய் காண காசோலையை நேசபிரபுவின் தாய் தந்தையரை அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்து அதிகாரிகள் வழங்க உள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...