பொள்ளாச்சியில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு 74 அடி உயர கொடி கம்பத்தில் தேசிய கொடியேற்றம்

சுதந்திரத்திற்காக போராடிய வீரர்கள், தலைவர்கள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காந்தியடிகள், நேரு, வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகுமுத்துக்கோன், ஜான்சி ராணி லட்சுமி பாய் உட்பட 90 சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


கோவை: நாட்டின் 75 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாக நேற்று கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பகுதியாக பொள்ளாச்சி நகர திமுக சார்பில் 9வது வார்டுக்கு உட்பட்ட சுப்பையா நகர் மைதானத்தில் 75 ஆவது குடியரசு தினவிழாவை முன்னிட்டு 74 அடி உயரம் கொடிக்கம்பம் நடப்பட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது.

மேலும் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகர திமுக செயலாளர் நவநீதி கிருஷ்ணன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் மூவர்ண பலூன்களை வானில் பறக்க விடப்பட்டனர். அதனை தொடர்ந்து சுதந்திரத்திற்காக போராடிய வீரர்கள், தலைவர்கள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காந்தியடிகள், நேரு, வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகுமுத்துக்கோன், ஜான்சி ராணி லட்சுமி பாய் உள்ளிட்ட 90 சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...