ஆழியார் வால்பாறை சாலையில் காரை இரண்டு நிமிடம் 40 நொடிகளில் 220 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று ஏழு வயது சிறுவன் சாதனை

நன்கு பயிற்சி பெற்று, மருத்துவரின் உடற்தகுதி சான்றிதழ் பெற்ற சிறுவன் தேவசுகன், இன்று உலக சாதனை படைக்கும் விதமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் வால்பாறை சாலையில் 900கிலோ எடையுள்ள காரை இழுக்கும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.


கோவை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி மாரீஸ்வரி. இவர்களது மகனான தேவசுகன்(வயது7). 5ம் வகுப்பு படித்து வரும் தேவசுகனுக்கு சிறு வயதில் இருந்தே சாதனை படைக்கும் வகையில் சிறுவனின் பெற்றோர்கள் காரை இழுக்கும் வகையில் பயிற்சி அளித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நன்கு பயிற்சி பெற்று, மருத்துவரின் உடற்தகுதி சான்றிதழ் பெற்ற சிறுவன் தேவசுகன், இன்று உலக சாதனை படைக்கும் விதமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் வால்பாறை சாலையில் 900கிலோ எடையுள்ள காரை இழுக்கும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.



காரின் முன்புறம் கயிறு கட்டபட்டு 2 நிமிடம் 40 வினாடிகளில் 220மீட்டர் தூரம் இழுத்து சென்று சிறுவன் தேவசுதன் உலக சாதனை படைத்தார். சிறுவனின் இந்த உலக சாதனை சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.

இதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கமும் சோழன் உலக சாதனை நிறுவன அதிகாரிகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். சிறுவன் காரை இழுத்து சென்ற போது அங்கிருந்த பார்வையார்கள் கைதட்டி உற்சாகபடுத்தியதோடு பாராட்டும் தெரிவித்தனர்.



ஏற்கனவே இந்த சிறுவன் மதுரையில் 200மீட்டர் தூரம் காணை இழுத்து சென்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...