Dr.அனுஷா ரவி பிறந்த தினத்தை முன்னிட்டு திருப்பூர் அரண்மனை புதூர் குழந்தைகள் மையத்தில் நலத்திட்ட உதவிகள்

குழந்தைகள் மையத்துக்கு தேவையான பொருட்கள் வழங்கியதுடன், குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கி Dr.அனுஷா ரவி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார். இதில் ஏராளமான மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: Dr.அனுஷா ரவி அவர்களுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு திருப்பூர் அரண்மனை புதூர் குழந்தைகள் மையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் செ.மகேந்திரன் தலைமை வகித்தார்.

Dr.அனுஷா ரவி அவர்கள் குழந்தைகள் மையத்துக்கு தேவையான பொருட்கள் வழங்கியதுடன், குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கி பிறந்த நாளை கொண்டாடினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட செயலாளர் கமல் K.ஜீவா அவர்கள் பங்கேற்றார்.

மேலும் மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் T.கஸ்தூரி, ஊடகப்பிரிவு மாவட்ட அமைப்பாளர் J.ஷாஜி, நகர செயலாளர்கள் அஷ்ரப் அலி, பரந்தாமன், திவாகர், தர்மராஜ், தனபால், பிரசன்னா, பழனிகுமார், காளிமுத்து, சாந்தி, தாமரைச்செல்வி, அமுதா, சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...