தேசிய அளவிலான கேலோ இந்தியா களரி பயட்டு விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற மாணவருக்கு உடுமலையில் உற்சாக வரவேற்பு

உடுமலை ஆர்.கே.ஆர் கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு பயிலும் மாணவர் சுர்ஜித் கேலோ இந்தியா களரி பயட்டு போட்டியில் சுவடுகள் பிரிவில் கலந்துகொண்டு, வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.


திருப்பூர்: தேசிய அளவிலான கேலோ இந்தியா களறிபயட்டு மற்றும் விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.



இதில் தமிழகம், கேரளம், புதுச்சேரி, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், டெல்லி, ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உட்பட 16 மாநிலச் சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.



இதில் உடுமலை ஆர்.கே.ஆர் கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு பயிலும் மாணவர் சுர்ஜித் கலந்து கொண்டு கேலோ இந்தியா களரி பயட்டு போட்டியில் சுவடுகள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.



இந்த நிலையில் பள்ளியின் சார்பில் பேண்டு வாத்தியங்கள் முழங்க மாணவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



களரி போட்டியில் தமிழகத்தில் வெள்ளி பதக்கம் வென்ற ஒரே மாணவர் சுர்ஜித் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஏற்கனவே 2021 ஹரியாணை மாநிலத்தில் நடைபெற்ற கேலோ போட்டியில் தங்கப் பதக்கமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. களரி பயட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவரை உடுமலை ஆர்.கே.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.கே. ராமசாமி, செயலாளர் ஆர்.கே.ஆர். கார்த்திக் குமார், பள்ளி முதல்வர் டி.மாலா பயிற்று வித்த சிலம்பம் மற்றும்‌ களறி பயட்டு ஆசான் வீரமணி மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் பயிற்சியாளர் வீரமணி கூறும் பொழுது, தமிழகத்தில் தற்சமயம் களரி போட்டியில் விளையாடுவதற்கு பலர் ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்த வேண்டும். மேலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மற்ற மாநிலங்களில் வழங்குவது போல வெற்றி பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...