கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட துவக்க விழா

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு வைக்கபட்டிருந்த அரிசி, பருப்பு ஆகியவற்றின் தரம் குறித்து அவர் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் இன்று (பிப்.01) உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் மோ.ஷர்மிளா, கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஸ்வேதா சுமன் ஆகியோர் இருந்தனர். பின்னர் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அங்குள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அப்பொழுது அங்கு வைக்க பட்டுள்ள அரிசி, பருப்புகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது அரசு பேருந்துகளின் தரம், அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, ஓட்டுநர், நடத்துனர்களிடம் ஏதேனும் குறைகள் உள்ளதா என கேட்டறிந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...