பட்டியலின மாணவியை வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொள்ளாச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னையில் பட்டியலின மாணவியை வன்கொடுமை செய்த நபரை கைது செய்திருப்பது வெறும் நாடகம் என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற கொறடா எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டார்.


கோவை: சென்னையில் பட்டியலின மனைவியை வன்கொடுமை செய்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் பகுதியில் கோவை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



எதிர்க்கட்சி சட்டமன்ற கொறடாவும், கோவை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை, வால்பாறை பகுதிகளை சேர்ந்த அதிமுகவினர் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டியலின மாணவியை வன்கொடுமை செய்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, சென்னையில் பட்டியலின மாணவியை வன்கொடுமை செய்த நபரை கைது செய்திருப்பது வெறும் நாடகம் என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

திமுக ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டு திமுக அரசு எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. கடுமையான மின் கட்டணம் உயர்வால் தொழில் நிறுவனங்களும், விசைத்தறி தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு திட்டமிட்டு செயல்படுத்தாமல் இருக்கிறது. நடைபெற இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும். இதே போல் தமிழகத்தில் எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் 200 தொகுதிக்கு மேல் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆவார் என்று எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தாமோதரன், கந்தசாமி, அமுல் கந்தசாமி மற்றும் பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...