நடிகர் விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பு – கோவையில் பட்டாசு வெடித்து நிர்வாகிகள் கொண்டாட்டம்

கணபதி சக்தி சாலையில் உள்ள கோவை வடக்கு மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு, வடக்கு மாவட்ட தலைவர் சம்பத் குமார் தலைமையில் நிர்வாகிகள் பூஜை செய்து, கேக் வெட்டி, பட்டாசு வெடித்து மேளம் தாளங்கள் முழங்க பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


கோவை: நடிகர் விஜய் மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தை நடத்தி பல்வேறு உதவிகளை செய்து வந்தார். இந்த நிலையில் விஜய் இன்று கட்சியின் பெயரை தமிழக வெற்றி கழகம் என அறிவித்தார். இதனை தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடினார்.

இதன் ஒரு பகுதியாக இன்று கோவை கணபதி சக்தி சாலையில் உள்ள கோவை வடக்கு மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு, வடக்கு மாவட்ட தலைவர் சம்பத் குமார் தலைமையில் நிர்வாகிகள் பூஜை செய்து, கேக் வெட்டி, பட்டாசு வெடித்து மேளம் தாளங்கள் முழங்க பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வடக்கு மாவட்ட தலைவர் சம்பத் குமார், இனிமேல் கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டுவதாகவும், அதிகளவில் உறுப்பினர்கள் சேர்க்கை நடத்தப்போவதாகவும் தெரிவித்தார்.



ஏற்கனவே விஜய் மக்கள் மன்றம் சார்பாக பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருவதாகவும், இனிமேல் அதனை அதிகப்படுத்தி பெரிய அளவில் மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் நலத்திட்டங்கள் செய்யப் போவதாகவும் அவர் கூறினார். ஏற்கனவே பொதுமக்களுக்கு தினமும் 100 பேருக்கு இலவசமாக உணவு வழங்கி வருவதாகவும், அந்தத் திட்டத்தை மேலும் தொடர்ந்து அதிகளவில் உணவு வழங்க திட்டமிட்டுள்ளதாக சம்பத் குமார் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...