கோவையில் கலையரசி பட்டம் வென்ற மாணவிகள் மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் வாழ்த்து

கதை எழுதுதல், ஓவியம் வரைதல், பறை வாசித்தல், நாடகம் ஆகிய போட்டிகளில் கலையரசி பட்டம் பெற்ற மாணவிகள், பட்டத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் காண்பித்து, இன்று (பிப்.5) வாழ்த்து பெற்றனர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், 2023-24-ம் ஆண்டிற்கான மாநில அளவிலான கலைத்திருவிழா நடைபெற்றது. இதில், ஏரளமான மாணவிகள் கலந்துகொண்டனர்.

போட்டியில், ஷாஜகான் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் கதை எழுதுதல், ஓவியம் வரைதல், பறை வாசித்தல், நாடகம் ஆகிய போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்று ”கலையரசி” பட்டம் வழங்கப்பட்டது.

இந்த பட்டத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்களிடம் காண்பித்து, இன்று (பிப்.5) வாழ்த்து பெற்றனர். உடன் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், பள்ளி தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன், ஆசிரியர்கள் விஜயா, கல்பனா ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...