சிறுகலந்தையில் தென்னை டானிக் பற்றிய செயல்முறை விளக்கம் அளித்த அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள்

வேளாண் கல்லூரி மாணவர்கள் வேரில் TNAU தென்னை டானிக் கட்டுவது எப்படி என்பது பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்து விளக்கினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.


கோவை: அரசம்பாளையம் அமிர்தா வேளாண்மை கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகள், ஊரக வேளாண்மை செயல்முறை பயிற்சி அனுபவ திட்டத்தின் (RAWE) கீழ் பல்வேறு விவசாய செயல்முறை விளக்கங்களை கிராம மக்களுக்கு அளித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சிறுகலந்தையில், தென்னை வேரில் TNAU தென்னை டானிக் கட்டுவது பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

விவசாயம் செய்வதற்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில் தென்னைக்கு உரம் போட்டு பராமரிப்பது சவாலாக உள்ளது. இதற்கு ஒரு சிறந்த தீர்வுதான் வேரில் TNAU தென்னை டானிக் கட்டுவது. இதை வருடத்திற்கு இருமுறை, ஆறு மாத இடைவெளியில் செய்து வருகையில், குரும்பை உதிர்வதை கட்டுப்படுத்தி அதிக காய்களைப் பெறலாம். இதனால் 20 சதவீதம் வரை மகசூலை அதிகரிக்கலாம். இந்நிகழ்வில் வேளாண் கல்லூரி மாணவர்கள் வேரில் TNAU தென்னை டானிக் கட்டுவது எப்படி என்பது பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்து விளக்கினர்.



வேளாண் கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு வெற்றிபெற அமிர்தா வேளாண்மை கல்லூரியின் முதல்வர் முனைவர் சுதீஷ் மணலில் மற்றும் குழு வழிகாட்டுனர்கள் முனைவர் சிவ சபரி, முனைவர் நவீன் குமார், முனைவர் யசோதா, முனைவர் கார்த்திக் ராஜா ஆகியோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...