உக்கடத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சமூக தீமைகளுக்கு எதிரான அமைதி பேரணி

கோட்டைப்புதூர் கிளை நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற பேரணியில் 250-க்கும் மேற்பட்ட மதரஸா மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்று, போதை மற்றும் வரதட்சணைக்கு எதிராக பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.


கோவை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோவை மாநகர் மாவட்டம் நிர்வாகம் சார்பாக கடந்த ஜனவரி 25 முதல் பிப்ரவரி 25 வரையிலான சமூக தீமைகளுக்கு எதிரான ஒரு மாத காலம் தீவிர பிரச்சாரம் அறிவித்திருந்தனர்.



அதன்படி, இப்பிரச்சாரத்தின் ஒரு வகையான ஞாயிற்றுகிழமை 04/02/24 மாலை 4 மணியளவில் கோவை உக்கடம் தெற்கு-கோட்டைப்புதூர், வைரம் நகர் மற்றும் G.M. நகர் பகுதியில் போதை மற்றும் வரதட்சணைகளுக்கு எதிராக மாபெரும் அமைதி பேரணி நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் மற்றும்

கோட்டைப்புதூர் கிளை நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் 250-க்கும் மேற்பட்ட மதரஸா மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் போதை மற்றும் வரதட்சணைக்கு எதிராக பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...