உடுமலை ஏரிப்பாளையத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் - 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வருகின்ற பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தலில் தேர்தலை எவ்வாறு எதிர்க் கொள்ள வேண்டும், காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை பொதுமக்களிடம் வீடுகளாக எடுத்து கூறி விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்று நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் உள்ள உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில் நடைபெற்றது.



வருகின்ற பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தலில் தேர்தலை எவ்வாறு எதிர்க் கொள்ள வேண்டும், காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை பொதுமக்களிடம் வீடுகளாக எடுத்து கூறி விழிப்புணர்வு செய்ய வேண்டும் மற்றும் அனைத்து பிரிவு தலைவர்களும் ஒன்றிணைந்து பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் தென்னரசு மற்றும் தொகுதி பொறுப்பாளர் செந்தில்குமார் நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.



தாராபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், மாவட்ட கவுன்சிலர் ஜனார்த்தனன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிட்டு சாமி, கண்ணுச்சாமி, மாவட்ட துணை தலைவர் முத்துகுமார், மற்றும் உடுமலை நகர தலைவர் கோ.ரவி, வட்டாரத் தலைவர் வழக்கறிஞர் செல்வகுமார், சிறுபான்மை பிரிவு மஜீத் உட்பட அனைத்து துறை பிரிவு நிர்வாகிகள் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...