உடுமலை பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - நூற்றுக்கு மேற்பட்ட விளம்பர போர்டுகள் பறிமுதல்

நகர அமைப்பு அலுவலர் உதயகுமார் தலைமையில் ஆய்வாளர் செல்வம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கச்சேரி வீதி, வ.ஊ.சி வீதி, சீனிவாச வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சாக்கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள், கூரை தகடுகள், பந்தல்கள் மற்றும் அனுமதி பெறாத விற்பனை வண்டிகள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதியில் சீனிவாசா வீதி, பசுபதி வீதி, சத்திரம் வீதி, வ உ சி வீதி, கச்சேரி வீதி, வக்கீல் நாகராஜன், வெங்கட கிருஷ்ணா ரோடு, கல்பனா ரோடு மற்றும் ராஜேந்திர ரோடு ஆகிய பகுதிகளில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகராட்சி ஆணையாளர் பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் தலைமையில், நகர மன்ற தலைவர் மத்தீன முன்னிலையில் அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



அப்போது மேற்கண்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என முடிவு செய்யப்பட்டு ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று நகர அமைப்பு அலுவலர் உதயகுமார் தலைமையில் ஆய்வாளர் செல்வம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கச்சேரி வீதி, வ.ஊ.சி வீதி, சீனிவாச வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சாக்கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள், கூரை தகடுகள், பந்தல்கள் மற்றும் அனுமதி பெறாத விற்பனை வண்டிகள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நூற்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் சாக்கடைக்கு வெளியே வைத்திருந்த விளம்பர போர்டுகள், சாலை ஓரம் நீண்ட நாள் வைத்திருந்த பிளக்ஸ் பேனர்கள் பறிமுதல் செய்யப்பட்டு நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சாலையோரம் விளம்பர போர்டுகள் வைத்தால் மீண்டும் பறிமுதல் செய்யபடும் என நகராட்சி அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கபட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...