பொள்ளாச்சியில் என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் சார்பாக கொங்கு நாட்டு சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா

விழாவில் ஈரோடு யு.ஆர்.சி கட்டுமான நிறுவன இயக்குனர் தேவராஜனுக்கு, கொங்கு நாட்டு சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. சுசீந்திரன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருக்கும் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக ரத்தினம் விருது வழங்கப்பட்டது.


கோவை: பொள்ளாச்சியில் என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்கள் சார்பில் அமரர் நாச்சிமுத்து கவுண்டர் 75வது ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நிறுவனர் தினத்தையொட்டி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவர்களுக்கு கொங்கு நாட்டு சாதனையாளர் விருது வழங்கும் விழா மகாலிங்கம் பொறியியல் கல்லூரி நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது.

என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஈரோடு யு.ஆர்.சி கட்டுமான நிறுவன இயக்குனர் தேவராஜனுக்கு, கொங்கு நாட்டு சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. சுசீந்திரன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருக்கும் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக ரத்தினம் விருது வழங்கப்பட்டது.



என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஹரிஹரசுதன் மற்றும் செயலாளர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.



விழாவில் பேசிய யு.என்.சி. கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தேவராஜன், மாணவர்கள் தங்கள் இலக்கினை நோக்கி விடா முயற்சியுடன் செயல்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு இலக்கையும் தனி கவனம் செலுத்தி இலக்கை அடையும்வரை விடாமுயற்சி செய்து வெற்றியடைய வேண்டும் என கூறினார்.



இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ கல்வி நிறுவனங்களின் மாணவ. மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...