அதிமுக, திமுகவில் இருந்து பலர் பாஜகவில் இணைய உள்ளனர் - கோவையில் முன்னாள் எம்.பி கே.பி. ராமலிங்கம் பேட்டி

அண்ணாமலையின் கரத்தை பலபடுத்துவதற்க்கும், அவரை சிறந்த தலைவராக உருவாக்குவதற்க்கும் தான் அதிமுகவிலிருந்து பாஜகவில் இணைந்திருக்கிறார்கள். அவர்களைக் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்று முன்னாள் எம்.பி கே.பி. ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை விமானநிலையத்தில் முன்னாள் எம்.பி கே.பி. ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, அண்ணாமலையின் கரத்தை பலபடுத்துவதற்க்கும், அவரை சிறந்த தலைவராக உருவாக்குவதற்க்கும் இவர்கள் எல்லாம் அதிமுகவிலிருந்து பாஜகவில் இணைந்திருக்கிறார்கள். இவர்களைக் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

அதேபோல் ஜே.பி.நாட்டா தமிழகம் வரும்போது இன்னும் அதிமுக, திமுகவிலிருந்து பல்வேறு தடைகளை தாண்டி கதவை உடைத்து கொண்டு பாஜகவில் இணைய இன்னும் சில பேர் இருக்கிறார்கள்.

அதனைத்தொடர்ந்து பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேலஞ்சர் துரை, இன்னும் அடுத்த பல ஆண்டுகள் பாஜக தான் ஆட்சியில் இருக்கும்.

தொழில்துறையான கோவைக்கு தேசிய நீரோட்டம் தான் பக்கபலமாக இருக்கும். அதை நினைத்து தான் நாங்கள் பாஜகவில் இணைந்திருக்கிறோம். ஊழல் பட்டியல் வெளியிடும் இளம் தளபதி, இளம் சிங்கம் அண்ணாமலை தலைமையில் நாங்கள் பயணித்து அவரின் கரத்தை வலுபடுத்துவோம். எங்களை வயதானவர்கள் என்று சொல்கிறார்கள். நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், எடப்பாடி, திண்டுக்கல் சீனிவாசன் எல்லாம் இளமையானவர்களா என கேள்வி எழுப்பினார். நாங்கள் என்ன டெல்லிக்கு அவர்களை போல தவிழ்ந்து போய் வந்தவர்களா என அவர் பேசினார்.

பின்னர், சிங்கநல்லூர் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், அண்ணா தொழிற்சங்க தலைவருமான சின்னசாமி பேசியதாவது, அண்ணாமலையின் பணி எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. திமுக - அதிமுகவை ஒழிப்பதற்கு அண்ணாமலை தயாராக இருக்கிறார் என்று பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...