உடுமலை அருகே சின்னாறு வனப்பகுதியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம்

வனப்பகுதி, குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் முதல் கட்டமாக தீயை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள சின்னாறு வனப்பகுதியில் வனச்சரகர் சிவக்குமார் ஏற்பாட்டில் கோடந்தூர், பொற்பாற்குடி, ஆட்டுமலை உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட மலைவாழ் கிராம மக்களுக்கு உடுமலை தீயணைப்புத்துறை சார்பில் கோடைகாலத்தில் ஏற்படும் காட்டுத் தீ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் வனப்பகுதி, குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் முதல் கட்டமாக தீயை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டன.



வனப்பகுதியில் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல கூடாது எனவும், இரவு நேரங்களில் வனவிலங்குகளை விரட்ட தீ பந்தம் போன்றவை பாதுகாப்பான முறையில் தயார் செய்யப்பட்டு வனவிலங்குகளை விரட்ட வேண்டும் எனவும் மலைவாழ் மக்களுக்கு உடுமலை தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஐந்து கிராம மலைவாழ் மக்கள் மற்றும் வனத்துறையினர்

கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...