ஆளுநருக்கு எதிராக மகாலிங்கபுரம் பகுதியில் திமுக மாணவரணி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் அவமதிப்பு செய்த ஆளுநரை கண்டித்து கோவை தெற்கு மாவட்ட திமுக மாணவரணி மற்றும் கல்லூரி மாணவர்கள் மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள அரசு கலை கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: சட்டசபை கூட்டத்தொடரில் நேற்று தமிழ் தாய் வாழ்த்து பாடலோடு சட்டமன்றம் தொடங்கும் என்பதால் மாநில அரசின் உரையை படிக்காமல் சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



தமிழ்நாடு சட்டமன்ற மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் அவமதிப்பு செய்தை ஆளுநரை கண்டித்து கோவை தெற்கு மாவட்ட திமுக மாணவரணி மற்றும் கல்லூரி மாணவர்கள் மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள அரசு கலை கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையை அவமதித்து வரும் ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும், தமிழ்நாடு அரசு பணத்தில் ஊதியம் பெரும் ஆளுநர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.



திடீரென மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



பின்னர் காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...